வீட்டுத்தோட்டத்தில் கீரை சாகுபடி

கீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில்தான் பயிர் செய்ய வேண்டும் என்றில்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கீரைகளும் வளர்க்கலாம். இடம் சிறியதாக இருக்கிறதே, இதில் எவ்வாறு பயிர் செய்வது? என்ற அச்சம் வேண்டாம். நீங்கள் வைத்திருக்கிற அந்த சிறிய இடத்தில் எப்படி பயிர் செய்வது, பலன் பெறுவது என்பது பற்றி இக்கட்டுரையில் கூறுகிறேன்.

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ, மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு அல்லது மூன்று அடி அகலத்தில், என தேவையான நீளத்திற்கோ) சிறு சிறு மேட்டுப்பாத்திகளாக (தரையிலிருந்து சுமார் அரை அடி உயரத்தில்) அமைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் விருப்பத்திற்கிணங்க இதில் நீங்கள், தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, பாலாக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்ற ரகங்களில் எதனை வேண்டுமானாலும் பயிரிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு ரகங்களையும் பயிரிடலாம்.

கீரை பாத்தியை சுற்றிலும் ஓரங்களில் அகத்திகீரை விதையை விதைத்து கொள்ளுங்கள். பாத்திகளின் வரப்புகளில் கொத்தமல்லி செடியின் விதைகளை ஊடுபயிராக பயிர் செய்யலாம். வெறும் கீரையை மட்டும் பயிர் செய்யாமல் அந்த வரப்பு ஓரங்களையும், கீரைகளின் இடைவெளிகளையும் நமக்கு சாதமாக்கிக் கொண்டால், அதாவது இதுபோல் வேறு சிலவற்றையும் பயிரிட்டுக் கொண்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வார்களே, இது பல மாங்காய்கள் நமக்கு கிடைக்கும். எப்படி என்றாலும் தண்ணீர் செலவும் வேலையும் ஒன்றுதான். ஆனால் இப்போது பலன் இரட்டிப்பாகும் அல்லவா.

கீரைத்தோட்டத்தின் வெளிப்புறம் சுற்றிலும் சாமாந்திப்பூ செடியினை பயிரிடுங்கள் (இது கீரை பயிரிட்ட பாத்திகளுக்குள்  பூச்சிகளை வரவிடாமல் தடுத்து வேலி போல் செயல்படும். மஞ்சள் நிறம் என்பது பூச்சிகளை அதிகம் கவரும். எனவே பாத்திகளுக்குள் வரும் பூச்சிகள் சாமந்தி பூவோடே நின்று விடும். கீரைகளுக்கு வராது).

கீரை விதைகளை சலித்த மணலுடன் கலந்து, பாத்திகளின் மேல் சீராக தூவி விடவும். பின்னர் கைகளால், மேல் மண்ணை மூடிவிடவும். பூவாளி கொண்டு தண்ணீரை பாத்திகளின் மீது மெதுவாக தெளிக்கவும்.

மூன்றாம் நாள் மீண்டும் பாத்திகளில் நீர் தெளித்து விடவும். ஒரு வாரம் கழித்து, கீரைகள் முளைத்து வந்திருக்கும். கூடவே ஒரு சில களைகளும் முளைத்திருக்கும். தேவையில்லாமல் முளைத்திருக்கும் அவ்வகை களைகளை கைகளால் பறித்து அகற்றிவிடவும். தொடர்ந்து, இரண்டு அல்லது மூன்று நாள் இடைவெளியில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து, நீர் தெளித்து வரவும். இருபத்தி ஐந்து நாள் முதல் முப்பது நாட்களுக்குள் கீரைகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.

வெந்தயக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது. அறுவடைக்குப்பின் விதைகளை  மீண்டும் தூவி பயிர் செய்திடலாம். மற்ற கீரை ரகங்களை, இருபத்தி ஐந்து நாள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்து வரலாம். (பத்து மாதங்கள் கழித்து தோட்டம் முழுதும் சுத்தப்படுத்தி, மீண்டும் இதே போல் விதைகள் விதைத்து அறுவடை செய்து வரலாம்).

பூவாளியால் தண்ணீரை பயிருக்கு பாய்ச்சும் போது, பத்து லிட்டர் தண்ணீருக்கு ஐநூறு மில்லி அமிர்தக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து விடவும். இது மட்டுமே போதும். வளர்ச்சி ஊக்கிக்காக வேறு உரமோ, டானிக்கோ கீரைகளுக்குத் தெளித்து விடாதீர்கள். மண்ணுக்கும் அது ஆபத்து, கீரைகளுக்கும்  நஞ்சு, செலவும் தேவை இல்லாமல் அதிகமாகும்.

அமிர்தக்கரைசல் தயாரிக்க இடுபொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அல்லது தயாரிக்க இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள், E.M.(Effective Micro Organism) கரைசலை தயாரித்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதைத்தயாரிப்பது என்பது, மிகவும் எளிதான ஒன்று. அது எப்படி என்பதைத்தொடர்ந்து காண்போம்.

E.M. கரைசல் தயாரிக்கும் முறை :

 1. கனிந்த நாட்டு வாழைப்பழம்                       – 1 கிலோ
 2. பரங்கிபழம்                                                           – 1 கிலோ
 3. பப்பாளிப்பழம்                                                     – 1 கிலோ
 4. நாட்டுச்சக்கரை (உருண்டை வெல்லம்) – 1 கிலோ
 5. நாட்டுக்கோழி முட்டை                                  – 1 எண்ணம்

மூடியுடன் கூடிய ஒரு சிறிய பிளாஸ்டிக் பேரல் எடுத்துக்கொள்ளவும். முதலில் கூறிய பழங்கள் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில்  போடவும். நாட்டுச்சர்க்கரையை நன்றாக பொடி செய்து அதையும் சேர்த்துக்கொள்ளவும். நாட்டுக்கோழி முட்டையை உடைத்து ஓட்டுடன் உள்ளே போடவும். இவை அனைத்தும் மூழ்கும் அளவுக்கு பேரலில் தண்ணீர் ஊற்றி, அதன் பின், காற்றுப்புகாதவாறு பேரலை இறுக்கமாக மூடி விடவும். கண்டிப்பாக கலக்குதல் கூடாது. இவ்வாறு நாம் தயாரித்த கரைசலை சூரிய ஒளி படாதவாறு நிழற்பாங்கான இடத்தினில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். முப்பது நாட்கள் கழித்த பின்பு மூடியை திறந்து பார்க்கவும். உள்ளே கரைசலின் மேலே வெண்மை நிற படலம் ஒன்று இருக்கும். இதுதான் நாம் தயாரித்த கரைசல் நன்றாக வந்திருக்கிறது என்பதற்கான சான்று. அப்படி வெண் படலம் வரவில்லை என்றால், கால்கிலோ நாட்டுச்ச்சக்கரையை பொடி செய்து, மீண்டும் அந்த கரைசலுடன் சேர்த்து பேரலை மூடிவிடவும். இப்படி மூடிய பின் அதிலிருந்து பதினைந்து நாள் கழித்து கரைசலை எடுத்து பயன்படுத்தலாம். தேவையான அளவு கரைசலை மட்டும் எடுத்து, வடிகட்டி பயன் படுத்தவும் .மீண்டும் பேரலை நன்றாக மூடி விடவும். இந்த கரைசலை 300 மி லி. அளவு எடுத்து, பத்து லிட்டர் தண்ணீருடன் கலந்து பூவாளி மூலம் பாசனம் செய்யலாம். இது மண்ணில் கலந்து நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெருக்கி, பயிருக்குத்தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும். இலைகளின் மீது படுவதனால்செடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.  வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

பூச்சிகள் வண்டுகள் தென்பட்டால் மட்டும், மூலிகை பூச்சி விரட்டியை தெளிக்கவும். அது தயாரிக்கும் முறையையும் கூட நான் இந்த நேரத்தில் கூறுகிறேன்.

மூலிகை பூச்சி விரட்டி :

இஞ்சி, பூண்டு, மிளகாய் – சம அளவு எடுத்து, தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.பின் இவை மூன்றையும் கலந்து கொண்டு, அதை ஓர் இரவு முழுதும் வைத்திருத்தல் வேண்டும். பின்பு அதனை துணியால் வடிகட்டி, 500 மில்லி அளவிற்கு, 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து இலைகளின் மேல் நன்றாக தெளித்துவிட வேண்டும்.

குறிப்பு: தோட்டத்தில் நீங்கள் பயிரிட்டிருக்கும், காய்கறி செடிகள் மற்றும் அனைத்து விதமான பயிருக்கும், இந்தக்கரைசல்கள் இரண்டையும் பயன்படுத்தலாம். இயற்கை முறையிலேயே பயிரிட்டு, ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்து, மண் வளத்தையும், நம் உடல் நலத்தையும் செம்மையாக வைத்திருப்போம்.

நண்பர்களே, நமது வீட்டு தோட்டத்திலே கீரைகளை வளர்ப்பது எப்படி என்பதை படித்து தெரிந்திருப்பீர்கள். இதை நீங்களும் செயல் படுத்தி பாருங்கள். நலமான வாழ்வை பெற்றிருப்பதை நீங்களே உணர்வீர்கள். மட்டுமல்லாமல், நீங்கள் உபயோகப்படுத்தும் கீரைகள் விட அதிகமாக கீரைகள் பெற்றிருந்தால் அவற்றை அண்டை அயலார்க்கும் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் கொடுத்து சிறிது பொருளும் ஈட்டலாம்.

அருகம்புல் பயன்கள்

‘ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி…’

என்று வாழ்த்து கூறுகையில் நம் முன்னோர்கள் இப்படி சொல்லி வாழ்த்துவார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், ஆல மரம் சிறிய பகுதியை நட்டு வைத்தாலும் அது தழைத்து பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கும். அருகம்புல்லும் எந்த விதமான இடங்களிலும் எந்த சூழ்நிலையிலும் பட்டுப்போகாமல் வேரூன்றி விரிந்து வளர்ந்துகொண்டே போகும். அதே போல் வாழ்த்து பெறுபவர்களும் வாழ்க்கையில் வாழ வேண்டும் என வாழ்த்துவதுண்டு.

அருகம்புல் பயன்கள் – Adjacent uses

அருகம்புல்லானது, விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பல விதங்களில் பயன் தரக்கூடிய அற்புத மூலிகை குணம் நிரைந்த ஒரு வகை புல். அருகம்புல் என்பது ஒரு தெய்வீக வழிபாட்டு மூலிகையாகவும் உபயோகிப்பது உண்டு. இதனுடைய மருத்துவ குணம் பற்றி சித்தர்கள் பலர் தங்கள் நூல்களிலே குறிப்பிட்டுள்ளனர். இதை நாம் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் சற்று விவரமாக இக்கட்டுரையில் பார்ப்போம்.

அருகம்புல் சாறு தயாரிக்கும் முறை :

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு, நாட்டு வெள்ளைப்பூடு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு, குறைந்த வேகத்தில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனை நன்கு வடிகட்டி, இனிப்பு தேவை என்றால் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம்.

இப்படி தயாரித்த சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து சப்பி சப்பி பருக வேண்டும். பருகிய பின் அரை மணி நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. மதிய வேலையிலோ அல்லது இரவிலோ என எந்த வேளையிலும் இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால், வெறும் வயிற்றில் குடிப்பதால் மட்டுமே இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும்.

அருகம் புல்லில் விட்டமின் ஏ, விட்டமின் சி சத்துக்களும், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளன.

அருகம் புல் சாறு அருந்துவதால் என்ன பயன் என்பது பற்றி இப்போது பார்ப்போம். இதில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நீக்கி, காரத்தன்மையை உருவாக்குகிறது.

அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது. சிறுநீர் பாதை அழற்சியை தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும், சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை  இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இரத்தத்தை சுத்தப்படுதுவதில் முதன்மை வகிக்கிறது. ஒவ்வாமை, விஷ ஜந்துக்கள் தீண்டுவதால் ஏற்படக்கூடிய விஷத்தன்மை, தோல் அழற்சி, தோல் நோய்களான சொறி, சிரங்கு, கரப்பான், பூஞ்சைகள் போன்ற நோய்களை அருகம்புல் சாறு குடித்து வந்தால் தடுக்கலாம். உடலில் உள் உறுப்புகளில் உள்ள நஞ்சுத் தன்மையை வெளியேற்றுகிறது. வெட்டுக்காயம் ஏற்பட்ட இடங்களில் அருகம்புல் சாறை ஊற்றுவதால் இரத்தக்கசிவானது நின்று விடும். அதே இடத்தில் அருகம்புல் சாறை ஒரு துணியில் நனைத்து கட்டி விட விரைவில் குணம் கிடைக்கும்.

அதிக உடல் சூடு கொண்டவர்கள் இதனைப் பருகுவதால் உடல் குளிர்ச்சித் தன்மை உண்டாகும். சிலருக்கு உஷ்ணத்தின் காரணமாக மூக்கில் இருந்து இரத்தம் ஒழுகும். அவர்கள் இரண்டு மூன்று சொட்டு அருகம் புல் சாற்றை மூக்குக்குள் விட்டால் இரத்தம் ஒழுகுவது நின்று விடும். அருகம்புல் சாற்றோடு, மஞ்சள் பொடியை சேர்த்து குழப்பி, புண்கள் மேல் தடவி வர புண்களானது  மறைந்துவிடும்.

இச்சாற்றினை தொடர்ந்து பருகி வருபவர்கள் சுறுசுறுப்புடனும், முக மலர்ச்சியுடனும் வசீகரத்துடன் இருப்பார்கள். இதை நீங்கள் பருகி வர இந்த மாற்றத்தை நீங்களே உணரலாம். குளிர்ச்சியான காலங்களில் மட்டும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பருக வேண்டும்.

சாற்றினை தயாரிக்க அதிகம் பேருக்கு நேரம் இல்லாமல் இருக்கும். எல்லோரும் விரும்பக்கூடிய இச்சாற்றினை நேரம் இருப்பவர்கள் தயாரித்து அத்தகையோருக்கு கொடுக்கலாம். காலையில் நடை பயிற்சியில் ஈடுபவர்களுக்கும், இதில் விருப்பம் இருக்கும் மற்றவர்களுக்கும் இந்த சேவை செய்து அதை ஒரு வியாபாரமாகவும் செய்யலாம்.

E70D9D16-40AC-4DA3-AB8E-BFBB8C77C2EA_L_styvpf

அருகம்புல் சாறு மட்டுமல்லாமல், அருகம்புல்லுடன் சிறிது தேங்காய் எண்ணெய், பசும்பால் சேர்த்து காய்ச்சி தலைக்கு தைலமாகவும் தேய்த்து வரலாம். முடி ஆரோக்கியமாக மினுமினுப்புடன் வளரும்.

அருகம்புல் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதையும் வாங்கி பயன்படுத்தி பயனடையலாம்.

அருகம்புல்லுடன் சிறிது மிளகு, வெற்றிலை, தேன் கலந்து தீநீராகவும் பருகலாம்.

தெய்வீக மூலிகையான அருகம்புல்லை பயன்படுத்தி வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ்வோம்.

ஆரஞ்சு பழம்

Orangeஆரஞ்சு பழம் உபயோகம் பெரும்பாலும் நம்மிடம் குறைவாகவே உள்ளது. பெரிய மனிதர்களை சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாகவோ அல்லது மருத்துவமனைக்கு யாரையாவது பார்க்க செல்கையில் ஒரு ஒப்புக்கோ என ஒரு சில வகைகளில் மட்டுமே உபயோகித்து வருகிறோம். ஆனால் இதன் பலனும் இதிலுள்ள விட்டமின் சத்துக்களும் மிக அதிகம். பலர் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.

 இது ஒரு மிக சிறந்த உணவு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அறுசுவையுள் – புளிப்பு, கசப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளை தனக்குள்ளே அடக்கி வைத்துள்ளது இந்த பழம். நான்காவது சுவையான இனிப்பையும் இதனுடன் கலந்து சாறாக பருகும் போது முழுமையான ஒரு ஊட்ட உணவாக நமக்கு அமைகிறது.

எலுமிச்சை சாறு உபயோகிப்பது போல் ஆரஞ்சு பழத்தினையும் சாறு பிழிந்து அதனுடன் குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டி சேர்க்காமலும் (குளிர்ச்சிக்காக மண் பானை நீர் சேர்த்துக்கொள்ளலாம்) இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை சேர்க்காமலும் (வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்) ஒரு வேளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது உணவுக்குப் பின்பும் இச்சாற்றினை அருந்தலாம்.

orange_juice_thg_111214_wgகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதினால் கிடைக்கும் பலன் என்பது மிக அதிகம். இரவு உணவு சாப்பிட்டு உடனே உறங்க செல்லும் பழக்கம் நெறைய பேரிடம் இருக்கிறது. இது தவறு. இப்படி உடனடியாக உறங்க செல்வதால் செரிமான கோளாறு ஏற்படும். வயிறு கனமாக தெரியும். இதனால் உறக்கமும் பாதிக்கும். மறுநாள் காலையில் கழிவு வெளியேறுவதிலும் சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலை கொண்டவர்கள் இரவு உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் ஆரஞ்சு பழ சாறினை மட்டும் அருந்திவிட்டு உறங்க செல்வதால் ஆழ்ந்த தூக்கமும் ஏற்படும். குடல் சுத்தமாகி கழிவுகள் இலகுவாக மறுநாள் காலையில் வெளியேறிவிடும்.

வெளியூருக்கு பிரயாணம் செய்பவர்கள் கையோடு இரண்டு மூன்று ஆரஞ்சு பழங்கள் எடுத்து செல்வது நல்லது. வெளியிடங்களில் கிடைக்கும் அசுத்தமான உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தினை கெடுத்துக்கொள்ள வேண்டாம். ஆரஞ்சு பழங்களின் சத்துக்களே போதுமானது. இரண்டு பழங்கள் சாப்பிட்டாலே வயிறு கம்மென்று ஆகிவிடும்.

இதை யாரெல்லாம் உபயோகிக்கலாம்? பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தைகள் முதல் வயோதியர்கள் வரை அனைவருமமே சாப்பிடலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆரஞ்சு சாற்றுடன் சம அளவு நீர் சேர்த்து இனிப்பு சுவைக்காக சிறிதளவு தேன் சேர்த்து இடை இடையே கொடுக்கலாம். குழந்தைகளுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது.

இச்சாற்றினை அருந்துவதால் ஏற்படும் பலன்கள் :

 • இரத்தத்தை சுத்தம் செய்து விருத்தி அடைய செய்கிறது.
 • ஜீரண மண்டலத்தை ஒழுங்கு படுத்தி பசியை தூண்டுகிறது.
 • கழிவு மண்டலம் மற்றும் சுவாச மண்டல உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது.
 • இரத்த ஓட்ட நரம்புகளை சுருங்கி விரியும் திறனை அதிகரிக்க செய்கிறது.
 • உடல் வளர்ச்சி மற்றும் எலும்புகள் வளர்ச்சியை நன்றாக தூண்டுகிறது.
 • ஆரஞ்சு பழத்தோலினை காய வைத்து பொடியாக்கி, அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து பேசியல் செய்வதால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சிடுகிறது.
 • குளியல் பவுடர் பயன்படுத்துபவர்கள் அதனுடன் இப்பொடியினை கலந்து தேய்த்து குளிப்பதால் தோல்கள் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
 • இதில் விட்டமின் சி சத்து என்பது மிக அதிகளவில் காணப்படுகிறது. இதனால் விட்டமின் சி சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்களான கண்பார்வை குறைவு, மாலைக்கண், கண் புரை நோய், கண் நீர் அழுத்த நோய் போன்ற பல நோய்களை தடுக்கிறது.

Orange table

ஆரஞ்சு பழம் என்றில்லை, எந்த பழங்கள் என்றாலும் தயவு செய்து பிரிட்ஜ்-இல் வைத்து உபயோக்கிக்காதீர்கள். பழங்கள் குளிர்ச்சியாக வாடாமல் இருக்கும். ஆனால் அதில் உள்ள உயிர் சத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். அதன்பிறகு நாம் சாப்பிடுவது என்பது ஒன்றுக்கும் உதவாது. வெளியில் வைத்திருந்து அது வாடியது போல் இருந்தாலும் அந்த பழத்தினுள் இருக்கும் உயிர் சத்துக்கள் அப்படியே இருக்கும். நாம் உபயோகிப்பதில் எந்த குறையும் இல்லை.

பல வகை உணவு உடலுக்கு கேடு !
பழ வகை உணவே நன்று !

தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

coconut-oil 2

தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

காலைல எந்திச்சி குளிச்சதுல இருந்து இரவு வரைக்கும் நமக்கு நெறைய விசயங்கள்ல தேங்காய் எண்ணெய் உபயோகப்படுது. கடையில போயி பாக்கெட்ல இல்ல பிளாஸ்டிக் டப்பால இருக்குற எண்ணெய்தான் வாங்கி உபயோகப்படுத்துறோம். சரி. இப்படி நாம வாங்கி உபயோகிக்கற எண்ணெய் எல்லாம் தேங்காய் எண்ணையே கிடையாது. எப்படிங்கரீங்களா? சந்தைல தேங்காய் விலை ஏறும் போது தேங்காய் எண்ணெய் விலை எறனும்லா? ஆனா இங்க ஏறி இருக்காது. அப்போ எப்பதான் ஏறும்…? நல்லா கவனிங்க…. பெட்ரோலிய பொருட்களின் விலை ஏறும் போதுதான் இந்த தேங்காய் எண்ணெய் விலையும் ஏறி இருக்கும். பெட்ரோலிய பொருட்களுக்கும் கடைல வாங்குற தேங்காய் எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்..? பெட்ரோலிய பொருட்களோட ஆக கழிவுதான் நாம உபயோகப்படுத்துற தேங்காய் எண்ணெய். அந்த கழிவைத்தான் நம்ம தலையில தேச்சிக்கிறோம். ஏன், நம்ம உணவுப்பொருட்கள்ள கூட அதத்தான் சேத்துக்கிறோம். சின்னக்குழந்தைகளுக்கு தேய்க்கிற பேபி ஹேர் ஆயில் கூட இந்த கழிவுதாங்க. சின்ன அதிர்ச்சியா கூட இது இருக்கும். ஆனால் இதுதாங்க 100% உண்மை. (பாட்டில் மற்றும் பாக்கெட்டில் எழுதி இருக்கும் ingredients பாருங்கள். அதில் மினரல் ஆயில் என்று இருக்கும். அதுதான் பெட்ரோலிய கழிவு. இதோடு வாசனை திரவியத்தையும் சேர்த்து இருப்பார்கள்).

இந்த எண்ணையை நாம உபயோகபடுத்துரதால நமக்கு என்னென்ன கெடுதி அப்படிங்கிறதையும் இப்ப நான் சொல்லிடுறேன்.

முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்.

முடி கொட்டும்.

முடி சீக்கிரம் வெள்ளையாகி போகும்.

தோல் வறண்டு போய்விடும்.

உணவோடு இதை சேர்த்துக்கொள்ளும்போது உடலுள் சென்று கெட்ட கொழுப்புகளாக மாறி உள்ளேயே தங்கிவிடும்.

 அப்போ சுத்தமான தேங்காய் எண்ணெய் பெறுவது எப்படி? வெகுசில கடைகளிலே கிடைக்கும் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணையை வாங்கி பயன்படுத்தலாம். அதன் தரத்தினை உறுதி செய்துகொள்வது நல்லது. அப்படி இல்லை என்றால் நாமே எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி சொல்கிறேன். இம்முறையானது முன்னோர்கள் வீட்டினில் பயன்படுத்திய ஒன்றுதான். இந்த தலைமுறையினருக்கு அது மறைக்கப்பட்டு விட்டது. அதன் செய்முறையை பற்றி இப்போது சொல்கிறேன்.
cn milk
வெள்ளோட்டமாக முதலில், ஒரு நூறு மில்லி அளவு எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஒரு தேங்காய் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். அந்த காய் இளம் காயாகவும் இல்லாமலும், முற்றிலும் தண்ணீர் வற்றிய காயாகவும் இல்லாமலும் தேங்காய் பூ துருவி எடுக்கும் தன்மை உள்ள காயாக இருக்க வேண்டும். (சாதாரணமா சமையலுக்கு பயன்படுத்துகின்ற காய் போல்) இப்போது தேங்காயை துருவி பூ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பூவில் சிறிதளவு நீர் விட்டு கையால் நன்கு பிசைந்து பால் எடுக்கவும். அந்த பாலை வடிகட்டி, பின்பு மீண்டும் சிறிதளவு தண்ணீர் விட்டு கையால் பிசைந்து பால் எடுக்கவும். பூவில் இருந்து முழுவதும் பால் எடுக்கும் வரை இம்முறையினை மீண்டும் மீண்டும் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். (சிலர் வெந்நீர் விட்டு கலந்து பால் எடுப்பார்கள். அப்படி செய்ய வேண்டாம். மிக்சியில் அடித்து பால் எடுக்கவும் கூடாது. ஆனால் ஆட்டு உரலில் இட்டு அரைத்து பால் எடுத்துக்கொள்ளலாம்). இப்படி எடுக்கப்பட்ட பாலை ஒரு காட்டன் துணியால் நன்றாக வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு இரவு அல்லது பதினைந்து மணி நேரமாவது மூடி வைத்து விடவும். குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மூடியை திறந்து பார்த்தால் தேங்காய் பாலானது பாலாடை கட்டி போல நீரில் மிதக்கும். அந்த பாலாடை கட்டியை ஒரு அகலமான கரண்டியால் வழித்து எடுக்கவும். மீதமான நீரை அப்புறப்படுத்தி விடவும்.

இப்போது ஒரு வாணலியில் இந்த பாலாடை கட்டியை ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். காஸ் அடுப்பு என்றால் ‘சிம்’மில் வைத்து சூடேற்றவும். ஒரு கரண்டியால் பாலாடை கட்டியை லேசாக கிளறி விட்டுக்கொண்டே வரவும். நேரமாக நேரமாக பாலாடை கட்டியிலிருந்து எண்ணையானது வெளியேறும். இறுதியாக எண்ணெய் முழுதும் கட்டியிலிருந்து வெளியேறிய பின் கட்டியானது பழுப்பு நிறமாக மாறி அடியில் தங்கிவிடும். இந்த நிலையில் அடுப்பில் இருந்து வாணலியை கீழே இறக்கிக்கொள்ளுங்கள். இப்போது முகர்ந்து பார்த்தால் தேங்காய் வாசம் ‘கும்’மென்று மணக்கும். சூடு ஆறிய பின்பு காட்டன் துணியால் வடிகட்டி பாட்டிலில் அடைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

1-20130406-083512முதன்முறையாக செய்யும்போது சில தவறுகள் நேரலாம். குறிப்பாக அதிக சூட்டினால் எண்ணெய் அடி பிடித்துக்கொண்டு லேசான கருகல் வாடை வரலாம். அப்படி இருந்தாலும் எண்ணையை பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்தடுத்து செய்யும் போது தவறுகளை சரி செய்து கொள்ளலாம். முதலில் ஒரு தேங்காய் வைத்து முயற்சித்து பார்த்தோம். பின்பு படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம். இப்படி தயாரித்த எண்ணையை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்பதையும் அடுத்ததாக பார்ப்போம்.

தலைக்கு தினமும் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் ஏற்படும் நன்மைகள்:

 • முடி உதிராது.
 • முடி உடைந்து போகாது.
 • முடி வறட்சி ஏற்படாது.
 • பேன், பொடுகு தொல்லை இருக்காது.
 • மயிர்க்கால்கள் ஆரோக்யமாகி நன்றாக வளரும்.
 • சீக்கிரம் வெள்ளை முடி (இள நரை) தோன்றாது.
 • குழந்தைகளுக்கு இந்த எண்ணையை உடலில் தேய்த்து வந்தால் தோல் மினுமினுப்புடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கும்.
 • குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவரும் தங்களது தோல் மினுமினுப்பு பெற இந்த தேங்காய் எண்ணையை உபயோகிக்கலாம்.
 • இந்த எண்ணையை சமையலுக்கு பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கிறது. சமையலும் நல்ல மனமுடன் இருக்கும்.

மனிதனுக்கு வரக்கூடிய நோய்களில் பெரும்பாலான நோய்கள் கடைகளில் விற்கும் செயற்கை முறையில் தயாரித்து விற்கப்படும் எண்ணெய்களால்தான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

நல்லெண்ணெய் நாமே தயார் செய்யலாம்.

‘வைத்தியனுக்கு கொடுக்கிறத வாணியனுக்கு கொடு’ இப்படி ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தினால் நோய் நொடி இல்லாமல் வைத்தியனிடம் போகாமல் நம்மள நாமே பாதுகாத்துக்கலாம் இல்லையா? நாம வாங்கக்கூடிய பொருள் எல்லாமே சுத்தமானதுதானா அப்படின்னு பாத்தா ரொம்ப யோசிக்கவே செய்யணும். நம்ம உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரைக்கும், உடம்புக்கு வெளியே இருந்தாலும் சரி, உள்ள இருந்தாலும் சரி நாம உபயோகிக்கிற பொருள் நூறு சதவீதம் ஆரோக்கியமானதுதானா? சுத்தமானதுதானா? உடலுக்கு ஏற்றதுதானா? அப்படின்னு யோசிச்சி யாருமே பொருட்களை வாங்குறதும் இல்லை, உபயோகிக்கிறதும் இல்லை. இதுதான் உண்மை. அது பெரிய ‘பிராண்டட்’ கம்பெனி பொருளா இருந்தாலும் சரி. தொலைகாட்சி பெட்டியில விளம்பரம் செய்ற கம்பனிகளா இருந்தாலும் சரி. கண்டிப்பா அதுல ஆரோக்கிய கேடான விசயங்கள் இருக்கத்தான் செய்யும்.

அப்போ என்ன செய்ய? எப்படின்னுனாலும் பொருள்கள் வாங்கித்தான ஆக வேண்டி இருக்கு. அப்படிங்கறீங்களா? சரிதான். கடைகள்ள வாங்க கூடிய அந்த பொருட்கள வீட்டுல நம்ம கண்ணு முன்னால நாமளே செய்து உபயோகப்படுத்தினா.. “அப்படி நாம செய்ய முடியுமா..? அதுக்கு பெரிய பெரிய இயந்திரம்லாம் வேணுமே…”அப்படிங்கற முனுமுனுப்பெல்லாம் வேண்டாம். எளிய முறைகள்ள குறைந்த செலவில நீங்களே இலகுவா தயாரிக்கிற மாதிரி சொல்லிக்கொடுக்க நான் தயாரா இருக்கேன். அப்படிப்பட்ட சில பொருட்கள பத்தி நாம இந்த கட்டுரைகள்ல இனி தொடர்ந்து பார்ப்போம்.

அந்த வகையில இன்னைக்கு எள்எண்ணை தயாரிப்பது எப்படின்னு சொல்றேன். எள்எண்ணை அப்படின்னா நல்லெண்ணெய் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும். எல்லா எண்ணை பெயர்களுமே அதனது விதைகள் பெயரை தாங்கியே வரும். அப்படி இருக்க எள்எண்ணையை மட்டும் கூறும் போது நல்லெண்ணெய் என்பார்கள். இந்த எண்ணையை உபயோகிப்பதால் உடலுக்கு எந்தவிதமான தீமைகளும் கொடுக்காமல் நன்மையை மட்டுமே செய்வதால் இதற்கு நல்ல எண்ணை என்றார்கள். (இப்போது கடைகளில் வாங்கும் நல்லெண்ணைக்கு இது பொருந்தாது).

பலசரக்கு கடைகள்ள அல்லது எள் பயிர் செய்கிற விவசாயிகளிடமோ குறைந்தபட்சம் 20 கிலோ எள் வாங்கி, அதை தூசி இருந்தால் சுத்தப்படுத்தி, 2 நாள் வெயிலில் காய வைத்து விடுங்கள். இந்த அளவு எள்ளுக்கு ஒரு கிலோ கருப்பட்டி என எடுத்துக்கொண்டு, அதனை எண்ணை அரைக்கிற மில்லுக்கு கொண்டு செல்லுங்கள். எல்லா ஊர்களிலும் எண்ணை அரைக்கிற மில் இருக்கும். சில இடங்கள்ள அரிசி அரைக்கிற மில்லோட சேத்து வச்சிருப்பாங்க. அப்படி இல்லைன்னா உங்க ஊர் ரைஸ் மில் காரர்ட்ட கேட்டா அது எங்க இருக்குன்னு சொல்லிடுவாங்க. அப்படி ஒரு மில்ல தேர்ந்தேடுத்துக்கோங்க. அதுல கொண்டு போயி இந்த எள், கருப்பட்டியை கொடுத்து அரைத்து அதிலிருந்து கிடைக்கும் எண்ணையை வாங்கிக்கொள்ளுங்கள். இதற்கு அவர்கள் குறைந்த பட்ச கூலியே கேட்பார்கள்.

அரைத்து கிடைத்த எண்ணையை வீட்டிற்கு கொண்டு வந்து, ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றி ஒரு சிறிய துண்டு கருப்பட்டியை அதனுடன் போட்டு சில்வர் பாத்திரத்தின் வாய் பகுதியை வெள்ளைத்துணியால் வேடு கட்டிக்கொள்ளுங்கள். அதை இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து விடுங்கள். மூன்றாம் நாள் நமக்குத்தேவையான சுத்தமான எண்ணை நன்றாக தெளிந்து இருக்கும். இப்போது அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு எள் வாங்கிக்கொண்டீர்களோ அதில் நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து சதவீதம் எண்ணை கிடைக்கும். அதாவது, 20 கிலோ எள்ளுக்கு 8 முதல் 9 கிலோ எண்ணை கிடைக்கும். இது நம் கண் முன்னாலே நாமளே தயாரித்த ஆரோக்கியமான எண்ணை. இதற்கென செலவும் அதிகம் கிடையாது. கிட்டத்தட்ட நீங்கள் வெளியில் வாங்கும் எண்ணையின் செலவுத்தொகையே இதற்கும் ஆகும். ஆனால் மருத்துவ செலவு மிச்சமாகும் என்பது உண்மை. இதை மாதம் ஒருமுறை வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வருடம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் நாம் தயாரித்த இந்த நல்லெண்ணெய்.

இப்படி ‘இரும்பு இயந்திரத்தில்’ வைத்து எண்ணை அரைத்து எடுப்பது என்பது சிறப்பு. எண்ணையை ;கல் செக்கில்’ வைத்து எடுப்பது என்பது மிக சிறப்பு. சில இடங்களில் ‘மர செக்கு’ இருக்கும். அதில் அரைத்து எடுப்பது என்பது மிக மிக சிறப்பு. ஏன் சொல்கிறேன் என்றால், இரும்பு இயந்திரத்தில் அரைத்து எடுக்கும் போது அதிக உஷ்ணத்தில் அரைக்கப்படும். கல் செக்கில் என்றால் அதை விட குறைவான உஷ்ணத்திலும் அதுவே மர செக்கில் எனும் போது மிக மிக குறைவான உஷ்ணத்திலும் அரைக்கப்படுகிறது. உஷ்ணம் அதிகமாக அதிகமாக எண்ணையில் இருக்கும் உயிர்ச்சத்துக்கள் குறைந்து போகும். கடைகளில் கிடைக்கும் எண்ணை, அதை தயாரிப்பவர்கள் பெரிய இயந்திரத்தில் வைத்து மிக மிக அதிக உஷ்ணத்தில் தயாரிக்கிறார்கள். எனவே, அதில் உயிர் சத்துக்கள் என்பது சுத்தமாக இருக்காது. மேலும் ரீபைண்டு என்ற பெயரில் அதில் உள்ள பிற சத்துக்களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள். நாம் அதை உபயோகபடுத்தினால் நமக்கு எந்த லாபமும் இருக்காதுதானே. ஆகவே இதை ஒப்பிடும் போது, நாம் தயாரித்த எண்ணை ஆயிரம் மடங்கு உயர்ந்தது.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், கடைகளில் எள் வாங்கும்போது எண்ணை தயாரிக்க என்று கேட்டு வாங்குங்கள். ஏனென்றால் சில எள் பொக்கு எள்ளாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட எள்ளை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். வாங்கிய எள்ளை கண்டிப்பாக வெயிலில் 2 நாட்கள் காயப்போட வேண்டும். எண்ணை எடுத்த பின்னரும் எண்ணையை 2 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும்.

தனிப்பட்ட ஒருவரால் இது முடியவில்லை என்றால், அப்பகுதியில் இருக்கும் ஒருவர் தேவையான நபர்களுக்கு இதனை செய்து கொடுத்து சிறிதளவு வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். தயவு செய்து இதை ஒரு சேவையாக செய்யவும்.

அருகம் புல் மருத்துவ பயன்கள் – Medicinal uses of nearby Grass

சரி. இதை உபயோகப்படுத்துவதால் நமக்கு என்னென்ன பயன் என்று பார்க்கலாம்.

காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர், இருபத்தைந்து மில்லி எண்ணையை வாயில் ஊற்றி இருபது நிமிடம் அப்படியே வாய்க்குள்ளேயே வைத்திருந்து பற்களுக்கிடையே நன்றாக படும்படி கொப்பளிக்க வேண்டும். வாயில் இருக்கும் எண்ணையானது தனது வழுவழுப்பு தன்மை நீர்த்துப்போய், நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும். அப்போது அதை வெளியே கொப்பளித்து விடவேண்டும். இப்படி செய்வதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு போன்றவை நீங்கிவிடும். உள் உறுப்புகள் பலம் அடையும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் வலி, ஈறு வீக்கம், தலை வலி சரி செய்யப்படும். இது ஒரு சர்வ ரோக நிவாரணி ஆகும். இதை ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் உபயோகிப்படுத்தி வந்தது. இப்போது ஆயில் புல்லிங் என்ற பெயரில் பிரபலமாகிக்கொண்டு வருகிறது.

வாரம் ஒருமுறை எண்ணையை தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய்கள் ஏற்படாது. தோல் மினுமினுப்புடன் இருக்கும். உடலில் உஷ்ணம் தணிந்து உள் உறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.

எண்ணை தேய்த்து குளிக்கும் போது அதனுடன் சிறிதளவு வெங்காயம், சீரகம், ஐந்து மிளகு, சிறிதளவு நைத்த இஞ்சி துண்டு சேர்த்து சூடு படுத்தி ஆறிய பின்னர் உடல் முழுதும் நன்றாக தேய்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் புதுப்பொலிவுடன் ஆரோக்கியமாக இருக்கும். நம் முன்னோர்கள் இம்முறையை பயன்படுத்திதான் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருந்ததாக கூறுவார்கள்.

Oil
மர செக்கு, கல் செக்கு, இயந்திர செக்கு

அதிகமான கால்சியம் சத்து இதில் உள்ளது என்பதால் கால்சிய சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் நேரிடையாக குடிப்பதால் அந்த குறைபாடு நீங்கும்.

பெண்களுக்கு கால்சிய சத்து குறைபாட்டினால் எலும்புகள் பலவீனமடையும். அவர்கள் தினமும் சிறிதளவு நேரிடையாக குடித்து வந்தால் இதெற்கென எந்த மருத்துவமும் தேவை இல்லை.

வளரும் இளம் குழந்தைகளுக்கு தினமும் சிறிதளவு நல்லெண்ணெயை குடிக்க கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு தன்மையுடன் வளர்வார்கள்.

சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் வர விடாது.

உடலில் வலி ஏற்பட்ட இடத்தினில் நல்லெண்ணையை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி நீங்கும்.

சிலருக்கு அதிக உஷ்ணத்தால் அடி வயிறு வலி, சிறு நீர் பிரிவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் அடி வயிற்றுப்பகுதியில் எண்ணையை தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

இப்போது தெரிகிறதா, வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என்ற பழமொழியின் அர்த்தம். கொஞ்சம் மெனக்கெட்டு நம்ம ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள்ல கவனம் செலுத்தி,நாம மட்டும் இல்லாம நம்ம சந்ததிகளையும் ஆரோக்கியமாக வளர்ப்போம். மீண்டும் ஆரோக்கியமான இன்னொரு தயாரிப்பு முறையில் சந்திப்போம்.

அருகம் புல் மருத்துவ பயன்கள் – Medicinal uses of nearby Grass

நெல்லிக்கனி (நெல்லிக்காய்)

நெல்லிக்கனி (நெல்லிக்காய்)

கனிகளுள் இரண்டு வகை கனிகளுக்கு மட்டும்தான் ‘ராஜ கனிகள்’ என்று பெயர். ஒன்று எலுமிச்சை மற்றொன்று நெல்லிக்கனி. இக்கனியின் ஆயுள் நீட்டிக்கும் தன்மை தெரிந்துதான் அதியமான் அவ்வைக்கு கொடுத்ததாக வரலாறுகளில் கூறப்படுகிறது. இப்படி நீண்ட வரலாறு கொண்ட அமிர்தத்திற்கு ஒப்பான அந்த நெல்லிக்கனியின் சிறப்பைப்பற்றி இங்கே பார்ப்போம்.

‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று போற்றப்படும் நெல்லிக்கனியானது அரிநெல்லி என்றும் காட்டு நெல்லி அல்லது பெருநெல்லி என்றும்  இரு வகைகளில் நமக்குக்கிடைக்கிறது. இதில் காட்டு நெல்லி மட்டும் அதிக மருத்துவகுணமும் பயன்படுவதுமாய் உள்ளது என்பதால் அதைப்பற்றி மட்டும் இங்கே விவரிக்கலாம் என்று இருக்கிறேன்.

aryadan213

சிறு சிறு இலைகளுடன் பெரிய மரமாகவும் காய்கள் அனைத்தும் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குவதும் பார்ப்பதற்கே அந்த மரங்கள் ரம்மியமாய் இருக்கும். பொதுவாக கோடை காலங்களில் இம்மரத்தில் காய்கள் அதிகமாய் காய்க்கும். ராஜ கனிகளான எலுமிச்சை மற்றும் நெல்லிக்கனி ஆகியவற்றின் புளிப்புத்தன்மை மட்டுமே (சிட்ரிக் ஆசிட்) உடலுக்கு நன்மை மட்டுமே செய்யும்.

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் அளவிட முடியாததாகும். இதன் இலை, பட்டை, வேர், பூ, கனி என அனைத்து பகுதிகளுமே மருந்தாக பயன்படுகிறது எனலாம். இம்மரத்தின் நிழலில் நின்று இளைப்பாறி மரத்தின் காற்றை சுவாசித்தாலே நோய்கள் பறந்து போகும். இம்மரத்தின் நிழல் தன்மை கூட உடலுக்கு ஒரு வித குளிர்ச்சியைக்கொடுக்கும்.

அக்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் அவர்கள் குளிக்க பயன்படுத்தும் நீர்நிலைகளில் நெல்லி மரக்கட்டைகளை போட்டு வைத்து அதில் குளிப்பதாகவும், சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக நெல்லிக்கனியினையும் சேர்த்து கொள்வதாகவும், இரவு தூங்கும் போது நெல்லி இலைகள் கொண்டு தயாரித்த படுக்கையில் துயில் கொள்வதாகவும் புராணங்களில் சொல்லப்படுவதுண்டு. இப்படி காலை முதல் இரவு வரையிலும் தங்களது வாழ்க்கையை நெல்லியோடு இணைந்து வாழ்ந்ததால் அவர்கள் நீண்ட ஆயுளோடும் கண்கள் அதிக பிரகாசத்துடனும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ்ந்துள்ளார்கள். நாமும் நெல்லியை பல்வேறு வடிவத்தில் பயன்படுத்துவதன் மூலம், உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் எந்த நோய்களும் வரவிடாமல் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும். எளிதில் குறைந்த விலையில் கிடைப்பதாலோ என்னமோ நாம் இக்கனியை முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கிறோம்.

நெல்லிக்கனியின் சுவையானது சுவைக்கும் போது முதலில் துவர்ப்பாகவும் பின் புளிப்பாகவும் இறுதியில் இனிப்பு சுவையையும் கொடுக்கக்கூடிய அதிசயமான கனி. நெல்லிக்கனியின் சிறப்பு அதில் உள்ள விட்டமின் சி எனப்படும் உயிர்ச்சத்துதான். 100 கிராம் அளவுள்ள மற்ற கனிகளின் விட்டமின் ‘சி’ சக்தியை இக்கனியுடன் ஒப்பிடும் போது,

அன்னாசி          – 0.12 மி.கி.

தக்காளி             – 32 மி.கி.

எலுமிச்சை      – 63 மி.கி.

வாழைப்பழம் – 170 மி.கி.

கொய்யா           – 200 மி.கி.

நெல்லிக்கனி  – 600 மி.கி.

மற்ற பழங்களில் உள்ள விட்டமின் ‘சி’ சத்தானது காற்றாலும், வெப்பத்தாலும் எளிதில் அழியக்கூடியது. ஆனால், நெல்லியில் உள்ள விட்டமின் சக்தியானது எந்த சூழ்நிலையிலும் சிதையாமல் நீண்ட நாட்கள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது எனலாம்.

நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி, நெல்லி விதைப்பொடி, திரிபலாசூரணம், தேன் நெல்லி இவ்வாறு நெல்லிக்கனியினை பல்வேறு வகைகளில் தயாரித்துக்கொள்ளலாம். இவற்றின் மருத்துவ பயன்களை தொடர்ந்து பார்ப்போம்.

இப்பழத்தினை நேரிடையாக சாப்பிடுவதன் மூலம் அதன் முழுப்பயனையும் அடையலாம். அது மிக சிறந்தது.

 • வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றையும் சமப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது.
 • பித்தம் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய வாந்தி, மயக்கம், காமாலை ஆகியவற்றை தடுத்துவிடுகிறது.
 • அதிகப்படியான உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சியை தர வல்லது.
 • ரத்தம் சுத்தமாகி, உடல் வலிமை பெறலாம்.
 • இன்றைய உணவுப்பழக்க முறையில் மசாலா பொருட்களையும், எண்ணையும் சேர்ப்பது என்பது அத்தியாவசியமாகி விட்டது. இவற்றை உணவுடன் சேர்ப்பதால் இதன் கழிவுகள் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்ற உள் உறுப்புகளில் தங்கி தொல்லைகள் பல கொடுப்பதோடு, உறுப்புகளை பலவீனமடையவும் செய்கிறது. இதற்கு நெல்லிக்கனிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உறுப்புகளில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி விடுவதோடு சுத்தமாகவும் வைத்துள்ளது. இந்த மருத்துவத்திற்கு நிகரான மருந்து நெல்லிக்கனியை தவிர வேறு எதுவும் இல்லை எனலாம்.
 • இதைப்பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களது கருப்பை கோளாறுகள் அனைத்தும் சீர் செய்யப்படும்.
 • என்றும் இளமையோடு இருந்திட ‘காயகல்பம்’ சாப்பிட்டு வரலாம் என சிலர் கூறுவார்கள். ஆனால், எவரும் எக்காலத்திலும் இளமையோடு இருந்து விடமுடியாது. ஆனால் முதுமையை தள்ளிப்போடலாம் என்பதே சரி. உடல் முதுமை அடையக்காரணம் உடலின் செல்கள் முதுமை அடைவதே. அப்படி செல்கள் முதுமை அடைவதை தள்ளிப்போட நெல்லிக்கனிகள் பெரும் பங்காற்றுகிறது.
 • விட்டமின் ‘சி’ சத்து குறைவால் ஏற்படும் ஸ்கார்வி எனும் நோயால் எலும்புகள் வலு இழந்து போகும். பற்கள் சொத்தையாகும். ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும். நகங்கள் வெண்மை நிறமடையும். இதற்கு மிக சிறந்த நிவாரணி நெல்லிக்கனி ஆகும்.
 • உடலில் ஏற்படும் நோய்களுக்கு ஆதி காரணமான மலசிக்கலுக்கு மருந்து, மாத்திரைகள் என எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நெல்லிக்கனியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும்.
 • தவறாமல் தினம் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் முதுமையிலும் கண் பார்வை என்பது மிகத்தெளிவாக இருக்கும். தலை முடி உதிர்தல், சளி, தும்மல், பீனிசம் போன்ற நோய்கள் அண்டாது.
 • மது அருந்துவோர்களின் உடல், உள் உறுப்புகள், நரம்பு மண்டலம் என அனைத்தும் வெகுவாக பாதிப்படைந்திருக்கும். இவர்கள் தொடர்ந்து நெல்லிக்கனியினை ஏதாவது ஒரு முறையில் எடுத்து வர உடல் தேறி வரும். ஆனால் கண்டிப்பாக அவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தி இருக்க வேண்டும்.
 • உடலில் ஏற்பட்டுள்ள நாட்பட்ட புண்களை, பள்ளம் விழுந்த புண்களை ஆற்றிட, நெல்லிக்கனியின் விதைகளை நீக்கி அரைத்து பற்று போட்டு வர, புண்கள் ஆறி விரைவில் குணமாவதோடு பள்ளமும் சரி ஆகிவிடும்.
 • அஜீரணம், இதய பலவீனம், அதிக ரத்த அழுத்தம், பசி இன்மை, நாக்கில் ருசி இன்மை, தோல் நோய்கள் இப்படி இதன் மருத்துவ பயன்கள் நீண்டு கொண்டே போகிறது.

பழம் கிடைக்கும் காலத்தில் தினமும் குறைந்த பட்சம் ஒரு பழமாவது சாப்பிட்டு வாருங்கள். அல்லது சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் அது உங்களை ஆரோக்கியமாக்கி ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கனிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றின் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளை அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். அதில் வேண்டிய அளவு நீர் விட்டு, இனிப்பு சேர்த்து பருகி வாருங்கள். இப்படி செய்வதால், சிறுநீர் எரிச்சல், ஆசனவாய் எரிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.

காய்ச்சின பாலில் இவ் நெல்லிச்சாறினை சிறிது கலந்து, அதனுடன் இனிப்பும் சேர்த்து பருகி வர பாலின் மந்த குணம் மாறி எளிதில் விரைவாக செரிமானம் ஆகும். இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து வருவது என்பது அவர்களது ஜீரண சக்தியை எளிதாக்கும்.

மேலே சொன்னது எல்லாம் நேரிடையாக பழங்களை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள். கனிகள் கிடைக்காத காலங்களில் நாட்டு மருந்து கடைகளில் நெல்லிப்பொடிகள் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

 • தினமும் இரவு உறங்க செல்லும் முன் அரை டீஸ்பூன் அளவு பொடியினை பாலுடனோ அல்லது தேன் கலந்தோ, இரண்டும் கிடைக்காத பட்சத்தில் இளஞ்சூட்டில் உள்ள தண்ணீருடனோ பருகி வர, பழங்கள் நேரிடையாக சாப்பிடுவதின் பலன்களை பெற்றிடலாம்.
 • நெல்லிப்பொடியுடன் சாம்பல் சம அளவில் கலந்து பல் தேய்த்து வர, பல் கூச்சம், பல் வலி, பல் சொத்தை, பல் ஆட்டம், ஈறு கெட்டு போதல் போன்ற பல் சம்பந்தப்பட்ட நோய் எதுவும் அண்டாது. வாழ்நாளில் பல் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் என்பதே இல்லை.
 • நெல்லிப்பொடியுடன் பச்சைப்பயிறு மாவு சம அளவு கலந்து, தலை மற்றும் உடலில் குளியல் பொடி போல தேய்த்து வர, தலை முடி உதிர்வு, தலை முடி வறட்சி நீங்கும். தோல் வறட்சி குறைத்து தோலினை மினு மினுப்பாக வைக்கும்.
 • வீடுகளில், அலுவலகங்களில் நாம் அருந்தும் தண்ணீரில், ஒரு லிட்டர் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் நெல்லிப்பொடி என கலந்து குடித்து வர, உள் உறுப்புகள் சுத்தமடைந்து அதன் செயல்பாடுகள் நன்றாக அமையும். மலச்சிக்கல்கள் தீரும்.

இது போக திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் பொடியாகும். இதை வாங்கி தினமும் உறங்க செல்லும் முன் ஒரு அரை டீஸ்பூன் அளவு தேனிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்து வாருங்கள். மேற் சொன்ன பலன்களை கொடுக்க வல்லது இச்சூரணம்.

மனிதனின் நல்ல ஆரோக்கியத்திற்கும், நீடித்த ஆயுளுக்கும்
இறைவனால் படைக்கப்பட்ட, எங்கும் எளிதாக மலிவாக
இயற்கையாக படைத்திட்ட அற்புத கனி இவ் நெல்லிக்கனி.
பயன்படுத்துவோம். பலனடைவோம்.

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம்

எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சம்பழத்தினை மட்டும் எலிகள் கடிக்காது. (எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்திருக்கும் பழம் என்பதால் இதனை முன்னோர்கள்  எலிமிச்சம்பழம் என்றும் சொல்வதாக கூறுவார்கள்). எலுமிச்சம்பழம் எல்லாருக்கும் தெரிந்த பழம்தான். பொதுவாக இதை ஊறுகாய் இடுவதற்கும், சாறு பிழிந்து அருந்துவதற்கும், புதிதாக கார் வாங்கினால் டயருக்கு அடியில் வைப்பதற்கும் (திருஷ்டி கழியுமாம்..) என ஒரு சில வகையிலே மட்டும்தான் உபயோகிக்கிறார்கள். இதன் பயன் இவ்வளவுதான் என்றும் நமக்குள்ளே நாமே வரையறுத்துக்கொண்டு அதற்கு மேல் இதை உபயோகிப்பது கிடையாது. ஆனால் இதை தினசரி ஏதாவது ஒரு வகையில் நம் உடலுக்கு எடுத்துக்கொள்ளும் போது எண்ணற்ற பலன்கள் நமக்கு கிடைக்கிறது. இதனை ‘தேவ கனி’அல்லது ‘ராஜ கனி’ என்று முன்னோர்கள் கூறியதன் ரகசியம் இப்போதுள்ள தலைமுறைகளுக்கு தெரியாமல் இருப்பது துரதிருஷ்டமே. எனக்குத்தெரிந்த வேறு சில பயன்களையும் உங்களுடன் இன்று பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த எலுமிச்சம்பழத்தின் பலன்களை இரண்டு வகையாக எடுத்துக்கொள்வோம். அதாவது உடலுக்கு உள்ளே எடுத்துக்கொள்வதால் என்ன பலன்கள்? உடலுக்கு வெளியே சேர்த்துக்கொள்வதால் என்ன பலன்கள்? என்றும் பார்க்கலாம். முதலில் உடலுக்கு உள்ளே உட்கொள்வதால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

எழுமிச்சம்பழத்தின் சாரானது மிகவும் புளிப்புத்தன்மை கொண்டதனால்  (5% சிட்ரிக் ஆசிட் அதனுள் இருப்பதால்) நேரிடையாக நம்மால் சேர்த்துக்கொள்ள முடியாது. இதில் நீர் மற்றும் இனிப்பு சேர்த்துதான் ஜூஸாக சாப்பிட முடியும். இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. அதே போல் ஐஸ் கட்டியோ, ஐஸ் தண்ணீரோ சேர்க்கக்கூடாது. ஆனால் நம்ம மக்கள் அனைவரும் குளிர்ச்சியான ஜூஸ் குடிக்கத்தான் ஆசைப்படுவார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்றால்  மண்பானை நீர் சேர்த்துக்கொள்ளலாம். அந்த குளிர்ச்சியே போதுமானது. இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை சேர்த்தே பழகிவிட்டோம். கூடுமான வரை அதை தவிர்த்துவிட்டு, பனை வெல்லம் அல்லது அச்சுவெல்லம் அல்லது உருண்டைவெல்லம் அல்லது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

3768113_origதினமும் கண்டிப்பாக இந்த ஜூஸ் பருகுவது என்பது மிகசிறந்தது. ஏனெனில், இதை உமிழ் நீருடன் சேர்த்து பருகும்போது இந்த கலவை வயிற்றுனுள் சென்று ஜீரண நீர்களுடன் விரைவில் கலக்கிறது. அங்கு செரிமானம் ஆகி திரவ நிலையை அடைந்து குடலால் உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்கு சென்று அங்கு சில இரசாயன மாற்றமடைந்து இரத்தத்துடன் கலந்து இருதயத்திற்கு செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் மூலம் உடல் முழுவதும் சென்றடைகிறது. பின்பு நுரையீரலுக்கும் சென்று மீண்டும் சுற்றி இறுதியாக சிறுநீரகத்திற்கும் தோல் பகுதிகளுக்கும் செல்கிறது. மறுநாள் இது உமிழ் நீராகவும் ஜீரண நீராகவும் மாறுகிறது.

என்னடா, ஜூஸ் குடிச்சோமா, சிறுநீரா அது வெளிய போச்சான்னு இல்லாம இது ஏன் இவ்வளவு சுத்து சுத்துதுன்னு உங்களுக்கு தோணலாம். ஏன் அது சுத்துரத பத்தி இப்படி படிக்கும்போதே உங்களுக்கு தலை சுத்தும்னு நெனைக்கிறேன். விடுங்க. கொஞ்சம் அதப்பத்தியும் தெரிஞ்சிக்குவோம். இவ்வாறு ஒவ்வொருபகுதிகளுக்கும் செல்வதால் ஏற்படும் பயன்களையும் தெரிஞ்சிக்கோங்க.

வாய், தொண்டை, உணவுக்குழாய், குடல், வயிறு ஆகியவற்றை நமக்கு தெரியாமலே எழுமிச்சம்பழமானது சுத்தப்படுத்துகிறது. உடலில் மிகப்பெரிய இரசாயன கூடமான கல்லீரலையும் சுத்தபடுத்துவதோடு கல்லீரலுக்கு தேவையான பல அமிலங்களையும் போகிறபோக்கில் கொடுத்துவிட்டு செல்கிறது. இதயத்திற்கு தெம்பு கிடைக்கிறது. இரத்தத்தின் கெட்டித்தன்மையைக் குறைத்து இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்துவிட்டு வேறு எதாவது தடைகள் இருந்தாலும்கூட அதையும் கரைத்துவிட்டு வெளியேற்றிவிடுகிறது. இதனால், உடம்பில் உள்ள அனைத்து இரத்த நாளங்களிலும் இரத்த ஓட்டமானது தங்கு தடையில்லாமல் செல்ல உதவுகிறது. அப்படி ஓட்டம் சீரானால் உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்புடனும் நோய் எதிர்ப்புத்தன்மையுடனும் செயல்படுகிறது.

இத்தோடு முடியவில்லை நீங்கள் குடித்த அந்த எலுமிச்சம்பழத்தின் சாற்றின் நன்மைகள். இது அடுத்ததாக நுரையீரலுக்கு செல்கிறது. அங்கு காற்று சிற்றறைக்குள் பசை போல சிக்கி இருக்கும் சளியினை கரைத்து வெளியேற்றுகிறது. இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். ஜூஸ் குடிச்சேன். சளி புடிச்சிடுச்சி அப்படின்னுதான கேள்விபட்டுருக்கோம். இப்படி சொல்றீங்களேன்னு கேக்க தோணும். இது உண்மை இல்லை. நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் நிகழ்வைத்தான் சளி பிடித்துக்கொள்கிறது என்று தவறாக உணரப்பட்டுக்கொண்டு வருகிறது. (அதை வெளியே செல்ல அனுமதியுங்கள். மாத்திரை மருந்துகள் போட்டு தடுக்காதீர்கள். அது பக்க விளைவுகளைத்தான் உண்டாக்கிவிடும்).

அடுத்தபடியாக சிறுநீரகம் சென்று சிறுநீரை நன்றாக வடிகட்ட உதவி செய்தும் கற்கள் இருந்தாலும் அதனை உடைத்து வெளியேற்றவும் உதவுகிறது.

அடுத்த வேலையாக தோல் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள கொழுப்புகளையும் கரைத்து வியர்வை துளைகளை விரிவடையச் செய்து வியர்வையை விரைவாக வெளியே தள்ளுகிறது.

ஆக உடம்பில் உள்ள தேவையற்ற அனைத்து கழிவுகளையும் வெளியே தள்ளுவதில் எலுமிச்சை சாறு முதலிடம் வகிக்கிறது.

இன்னொரு முக்கியமான விசயம், இதில் அமிலத்தன்மை இருக்கும் காரணத்தால் அல்சர், குடல் புண்கள், ருமேட்டிசம், ஆர்த்தரைட்டீஸ் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மிக குறைவான அளவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் ஏற்படும்  கை கால் நடுக்கம் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்புரை நோய் ஏற்படுவது குறைகிறது.

எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு நீரும் சேர்த்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ஏற்படாது. வாய்ப்புண் ஏற்படாது,

அசைவ உணவு உட்கொள்பவர்கள் உணவுடன் சிறிதளவு சாறு பிழிந்து கொண்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். பொதுவாக எண்ணெய் பலகாரங்கள் உண்ணும் போதும் சிறிது சாறு சேர்த்துக்கொண்டால் செரிமானம் சிறப்பாகும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடித்து வருவது மிக மிக சிறந்தது. அல்லது உணவுக்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவோ அல்லது உணவு உண்டு சிறிது நேரம் கழித்தோ சாற்றினைப் பருகுவது மேற்கண்ட பலன்களை கொடுக்கும்.(பருகும் போது மடமடவென்று குடிக்காமல் சப்பி சப்பி உமிழ் நீருடன் கலக்கச்செய்து குடிக்க வேண்டும்).

சரி. உடலுக்கு வெளியே சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும் இப்போது பார்ப்போம். பொடுகு தொல்லை இருப்பவர்கள் வாரம் ஒருமுறை சாற்றினை நேரிடையாக தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை என்பது இருக்காது. பொடுகு தொல்லை இல்லாதவர்களும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இப்படி தேய்த்து குளித்து வந்தால் அழுக்குகள் சேராது, பேன் தொல்லைகள் இருக்காது. முடி சுத்தமாகும். (ஷாம்பூ பயன்படுத்த தேவை இல்லை. ஷாம்பூவினால் ஏற்படும் முடி உதிர்வுகள் கூட எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வருவதால் மட்டுப்படும்).

சாற்றினை நீரில் கலந்து முகம் கழுவினால் கரும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறையும். முகம் தெளிவடையும்.

சருமத்தில் புண்கள், சொறி சிரங்குகள் இருப்பின் இச்சாற்றினை நீரில் கலந்து கழுவி வர புண்கள் குணமடைந்து தோல்கள் மிருதுவாகும்.

தேள் போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டினால் அவ்விடத்தில் பழத்தை இரண்டாக நறுக்கி அந்த இடத்தில் தேய்த்து வர விஷ முறிவு ஏற்படும்.

mbqoj7322ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி படத்தில் காட்டியுள்ளபடி கிராம்புகள் சிலவற்றை அந்த எலுமிச்சை துண்டில் சொருகி கொசு வரும் இடங்களில் வைத்து விடுங்கள். கொசு தொல்லை என்பது கிடையவே கிடையாது. தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் கொசுவிரட்டிகளுக்கு குட்பை சொல்லிவிடுங்கள்.

பயணத்தின் போது ஏற்படும் குமட்டலை தடுக்க இப்பழத்தினை லேசாக கிள்ளிவிட்டு அதன் வாசத்தினை முகர்ந்துகொள்ள குமட்டல் அடங்கும்.

எலுமிச்சை சாற்றுடன் சிறிது தண்ணீரும் கலந்து வீட்டின் தரை மற்றும் குளியலறை கழிப்பறைகளின் தரைகளை துடைத்துக்கொள்ளலாம். சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

இவ்வளவு பயன் தரும் எலுமிச்சையை தேவ கனி என்று சொல்வது மிகப்பொருத்தமே.

கொத்தமல்லி கீரை

கொத்தமல்லி கீரை

கொத்தமல்லி கீரை

அட.. என்ன ஒரு மணம்…! இந்த பேரை சொன்னாலே உங்க மூக்குல ஒரு வாசனை உள்ள போகுமே..! ஒரு மிதிவண்டியில அந்த கீரைய கொண்டுட்டு போனா அந்த தெருவே அப்படி ஒரு மணமா இருக்கும்ல..? அப்படிப்பட்ட இந்த கீரைய சமையலுக்கு உபயோகிக்காத வீடே இல்லைன்னு சொல்லலாம். கடையில எந்த ஒரு சமையலுக்கும் காய்கறி வாங்க போகும்போது அத இலவசமா கொஞ்சம் போலயாவது வாங்கிட்டு வந்துரனும் நமக்கு. அப்படி நெருக்கமான கீரை இந்த கொத்தமல்லி கீரை.

வாசம் என்பது மட்டுமின்றி,  இதனுடைய பயன்களும் அதிகம். அதைப்பற்றி இப்போது பார்ப்போம். ஜீரணத்தை தூண்டுகிறது. வாந்தி, விக்கலை தடுக்கிறது. ஆண்மை குறைவை நீக்குகிறது. பைத்தியம் தணிக்கிறது. சிறுநீரை பெருக்குகிறது. இதில் விட்டமின் ‘A’ சத்து உள்ளதால், கண் பார்வை தெளிவாகிறது. விட்டமின் ‘C’ சத்தும் இந்த கீரையில் அதிகம் உள்ளது என்பதால், உடலில் ஏற்படக்கூடிய சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய்களை குணமாக்கும் தன்மை உள்ளது. எலும்பு, பற்கள் ஆகியவற்றிற்கு தேவையான கால்சியம் சத்தும் இதில் இருக்கிறது. நோயாளிகளுக்கு நாக்கு ருசி மாறி, வாய்க்கசப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். அவர்கள் இந்தக்கீரையை துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு ருசி பழைய நிலைக்கு வந்துவிடும்.

சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளவர்கள் கீரை 50 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான அளவு இட்டு அரைத்து புண்கள் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.

ரத்த சோகை உள்ளவர்கள் கீரையுடன், உளுந்தம் பருப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். ரத்த சோகை அதிகமானால், மஞ்சள் காமாலை நோயில் கொண்டுபோய் நம்மை தள்ளிவிடும். தொடர்ந்து இதை சாப்பிட்டு வருபவர்கள் இதிலிருந்து தப்பிக்கலாம்.

பற்களில் ரத்தம் கசிவு, வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிதளவு கொத்தமல்லி கீரையை எடுத்து பச்சையாக அப்படியே மென்று, சிறிது நேரம் வாயில் வைத்திருந்து பின்னர் வெளியில் துப்பிவிடுங்கள், பின் வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும். இப்படி தொடர்ந்து இருபது நாட்கள் செய்து வர, அந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பாற்றல் நம் உடலில் அதிகரிக்க, கொத்தமல்லி இலைகளுடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன்  கற்கண்டு அல்லது தேன் கலந்து தீனீராக்கி (காப்பி, டீ இவற்றுக்குப்பதிலாக) காலை மாலை வேளைகளில் குடித்து வரலாம். மது போன்ற போ
தை பழக்கத்திற்கு அடிமையாகி பித்தம் தலைக்கேறியவர்கள் இந்த தீனீரை குடித்து வந்தால் படிப்படியாக பித்தம் தணியும்.

Kothamalli keerai

 

மணத்தக்காளி கீரை

மிளகு தக்காளி, சுக்கட்டிக்கீரை, கருஞ்சுக்கட்டி … இந்த பெயர்களை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா…? இவையெல்லாம் மணத்தக்காளி கீரையின் மற்ற பெயர்களே…

இந்த செடியினை அதிகம் பேர் பார்த்திருப்பீர்கள். குட்டித்தக்காளி, குட்டை தக்காளி, குறுந்தக்காளி என்று கிராமங்களில் கூறி அதைப்பார்த்தும் பார்க்காதது போல் போய் இருந்தீப்பீர்கள். மணத்தக்காளி கீரை என்றாலே இன்னும் சிலருக்கு தெரிவது, அது வயிற்றுபுண்களை ஆற்றக்கூடியது என்று. அது போக இன்னும் அதிகமான சத்துக்கள் அதில் உள்ளது. அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், புரதச்சத்து, மாவுப்பொருட்கள்… இப்படி அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் இக்கீரை பயன்படுகிறது.

இந்தக்கீரையை அன்றாடம் நம் உணவோடு எடுத்துக்கொள்வதால், குடல் புண், வாய்ப்புண், பால்வினை நோய்கள், உடல் உஷ்ணம், கர்ப்பப்பை கோளாறுகள், மலச்சிக்கல், காமாலை, தலைவலி போன்ற நோய்களை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ரத்த மூல நோயை குணப்படுத்துகிறது. உடலில் தேமல், ரத்தக்கட்டிகள், கொப்பளங்கள் போன்றவற்றையும் நீக்குகிறது.

இந்தக்கீரையை பருப்புடன் சமைத்து உண்பது நல்லது. கீரையை புழுங்கல் அரிசி கழு நீரில் அவித்து, சமைத்தால் மிகுந்த நன்மையைத்தரும். இறைச்சி உண்ணும் நாட்களில் இந்தக்கீரை உண்பதைத்தவிர்ப்பது நல்லது. இக்கீரையின் சாறெடுத்து அதை வாயில் இட்டு சிறிது நேரம் கழித்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். வாய் துர்நாற்றமும் இல்லாமல் போய் விடும். வயிற்றுப்புண்களால் அவதிப்படுவோர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் கீரை சாற்றினை ஒரு அவுன்ஸ் வீதம் சுமார் பத்து நாட்கள் பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

இந்தப்பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை பலமடைந்து அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.

மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டு வருவதால் வாயில் ஏற்பட்ட ரணம், உடலில் ஏற்பட்ட சூடு, வாத வீக்கங்கள், குடல் புண்கள் ஆறும். வயிற்றுப்பூச்சிகளை கொள்ளும்.

மொத்தத்தில் மணத்தக்காளி செடியின் வேர் முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. எந்த வகையிலாவது மணத்தக்காளியை உணவுடன் சேர்த்து கொள்வது என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயமாகும்.

Manathakkali

பசலைக்கீரை

பசலைக்கீரை

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறந்த நிவாரணி பசலைக்கீரையாகும். மஞ்சள் காமாலையால் உடல் மெலிந்தவர்கள் பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். மேலும், மலக்கட்டு சீர் செய்யும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி பார்வை தெளிவு பெறும்.

பசலைக்கீரையை வதக்கி வீக்கம், கட்டி போன்றவற்றின் மேல் வைத்து கட்டி வர, கட்டி உடைந்து புண்களை ஆற்றும் ஆற்றல் உண்டு. சீழ் பிடித்து நீண்ட நாள் ஆறாமல் புண்கள் இருந்தாலும் அதையும் இக்கீரையை கொண்டு கட்டி வர, உடனடியாக ஆற்றிவிடும் தன்மை இதற்கு உண்டு.

பாசி பருப்பு, துவரம் பருப்பு இவைகளுடன் கீரையை சேர்த்து சாப்பிட்டு வருவோர்க்கு பித்தம் தணியும், நீர்த்தாரை சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் நோய்கள், சீதபேதி, போன்ற நோய்கள் குணமாகும். மிளகு, சீரகம், பூண்டு இவற்றுடன் சேர்ந்து இக்கீரையை உண்டு வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும். மார்பு வலி நீங்கும்.

தாது விருத்திக்கான கீரை இது. போகத்தை தூண்டி இல்லறம் சிறக்க பசலைக்கீரையை உண்டு வந்தால் போதும். சக்தி கிடைக்கும். குளிர்ச்சி அதிகமாக தரக்கூடிய கீரை.

பசலைக்கீரையை சூப் செய்து சாப்பிடும் முறையைப்பற்றி கூறுகிறேன். இதற்கு பசலைக்கீரை கட்டு ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். காய்கறிகள் சிலவற்றை மூன்று கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூன் ஆட்டா மாவு, இரண்டு ஸ்பூன் வெண்ணெய், மூன்று கப் பால், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது இதன் செய்முறையைப்பற்றி கூறுகிறேன். எடுத்துக்கொண்ட காய்கறிகளையும், பசலைக்கீரையையும் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பை அதனுடன் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து இருபது நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பால், வெண்ணெய், மாவு ஆகியவற்றை நன்றாக கலந்து, தனியாக இதையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து, பின்னர் நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள கீரை காய்கறிகளை பால் வெண்ணெய், மாவுடன் சேர்த்து மீண்டும் பத்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். சூப் ரெடி. சாப்பிட நீங்களும் ரெடிதானே..?