வணக்கம்.
உழவு தொழிலுக்கு உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்தவன் தமிழன். அப்போது உழவர்களின் வாழ்வு இயற்கையோடு ஒத்திசைந்து இருந்தது. உழவர்கள் சுயசார்போடு ஆரோக்கியமான வாழ்வு தமக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் ஏன் மண்ணுக்கும் கூட கொடுத்து வாழ்ந்தான்.
இரண்டாம் உலகப்போருக்கு பின் உலக நாடுகள் இந்திய விவசாய பல்கலைகழத்தின் துணையோடு, உழவர்களின் ஆசையினை தூண்டி, அதிக உற்பத்தி என்று மூளைச்சலவை செய்து இயற்கைக்கு முரணான விவசாயம் செய்ய விவசாயிகளை தயார் செய்தது. அதன் பயனாக கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாம் கண்டு வரும் இழப்புகளை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
எனவே, பாரம்பரிய இயற்கை வழி விவசாயத்தை மீட்டெடுத்து உழவர்களின் வாழ்வும் மக்களின் வாழ்வும் மீண்டும் மறுமலர்ச்சி பெற இயற்கைக்கு திரும்புவோம். இயற்கை வழி விவசாயம் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் இத்தளத்தில் என்னோடு பயணியுங்கள்.
நன்றி.