ஆரஞ்சு பழம்

Orangeஆரஞ்சு பழம் உபயோகம் பெரும்பாலும் நம்மிடம் குறைவாகவே உள்ளது. பெரிய மனிதர்களை சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாகவோ அல்லது மருத்துவமனைக்கு யாரையாவது பார்க்க செல்கையில் ஒரு ஒப்புக்கோ என ஒரு சில வகைகளில் மட்டுமே உபயோகித்து வருகிறோம். ஆனால் இதன் பலனும் இதிலுள்ள விட்டமின் சத்துக்களும் மிக அதிகம். பலர் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.

 இது ஒரு மிக சிறந்த உணவு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அறுசுவையுள் – புளிப்பு, கசப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளை தனக்குள்ளே அடக்கி வைத்துள்ளது இந்த பழம். நான்காவது சுவையான இனிப்பையும் இதனுடன் கலந்து சாறாக பருகும் போது முழுமையான ஒரு ஊட்ட உணவாக நமக்கு அமைகிறது.

எலுமிச்சை சாறு உபயோகிப்பது போல் ஆரஞ்சு பழத்தினையும் சாறு பிழிந்து அதனுடன் குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டி சேர்க்காமலும் (குளிர்ச்சிக்காக மண் பானை நீர் சேர்த்துக்கொள்ளலாம்) இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை சேர்க்காமலும் (வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்) ஒரு வேளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது உணவுக்குப் பின்பும் இச்சாற்றினை அருந்தலாம்.

orange_juice_thg_111214_wgகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதினால் கிடைக்கும் பலன் என்பது மிக அதிகம். இரவு உணவு சாப்பிட்டு உடனே உறங்க செல்லும் பழக்கம் நெறைய பேரிடம் இருக்கிறது. இது தவறு. இப்படி உடனடியாக உறங்க செல்வதால் செரிமான கோளாறு ஏற்படும். வயிறு கனமாக தெரியும். இதனால் உறக்கமும் பாதிக்கும். மறுநாள் காலையில் கழிவு வெளியேறுவதிலும் சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலை கொண்டவர்கள் இரவு உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் ஆரஞ்சு பழ சாறினை மட்டும் அருந்திவிட்டு உறங்க செல்வதால் ஆழ்ந்த தூக்கமும் ஏற்படும். குடல் சுத்தமாகி கழிவுகள் இலகுவாக மறுநாள் காலையில் வெளியேறிவிடும்.

வெளியூருக்கு பிரயாணம் செய்பவர்கள் கையோடு இரண்டு மூன்று ஆரஞ்சு பழங்கள் எடுத்து செல்வது நல்லது. வெளியிடங்களில் கிடைக்கும் அசுத்தமான உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தினை கெடுத்துக்கொள்ள வேண்டாம். ஆரஞ்சு பழங்களின் சத்துக்களே போதுமானது. இரண்டு பழங்கள் சாப்பிட்டாலே வயிறு கம்மென்று ஆகிவிடும்.

இதை யாரெல்லாம் உபயோகிக்கலாம்? பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தைகள் முதல் வயோதியர்கள் வரை அனைவருமமே சாப்பிடலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆரஞ்சு சாற்றுடன் சம அளவு நீர் சேர்த்து இனிப்பு சுவைக்காக சிறிதளவு தேன் சேர்த்து இடை இடையே கொடுக்கலாம். குழந்தைகளுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது.

இச்சாற்றினை அருந்துவதால் ஏற்படும் பலன்கள் :

  • இரத்தத்தை சுத்தம் செய்து விருத்தி அடைய செய்கிறது.
  • ஜீரண மண்டலத்தை ஒழுங்கு படுத்தி பசியை தூண்டுகிறது.
  • கழிவு மண்டலம் மற்றும் சுவாச மண்டல உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது.
  • இரத்த ஓட்ட நரம்புகளை சுருங்கி விரியும் திறனை அதிகரிக்க செய்கிறது.
  • உடல் வளர்ச்சி மற்றும் எலும்புகள் வளர்ச்சியை நன்றாக தூண்டுகிறது.
  • ஆரஞ்சு பழத்தோலினை காய வைத்து பொடியாக்கி, அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து பேசியல் செய்வதால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சிடுகிறது.
  • குளியல் பவுடர் பயன்படுத்துபவர்கள் அதனுடன் இப்பொடியினை கலந்து தேய்த்து குளிப்பதால் தோல்கள் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
  • இதில் விட்டமின் சி சத்து என்பது மிக அதிகளவில் காணப்படுகிறது. இதனால் விட்டமின் சி சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்களான கண்பார்வை குறைவு, மாலைக்கண், கண் புரை நோய், கண் நீர் அழுத்த நோய் போன்ற பல நோய்களை தடுக்கிறது.

Orange table

ஆரஞ்சு பழம் என்றில்லை, எந்த பழங்கள் என்றாலும் தயவு செய்து பிரிட்ஜ்-இல் வைத்து உபயோக்கிக்காதீர்கள். பழங்கள் குளிர்ச்சியாக வாடாமல் இருக்கும். ஆனால் அதில் உள்ள உயிர் சத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். அதன்பிறகு நாம் சாப்பிடுவது என்பது ஒன்றுக்கும் உதவாது. வெளியில் வைத்திருந்து அது வாடியது போல் இருந்தாலும் அந்த பழத்தினுள் இருக்கும் உயிர் சத்துக்கள் அப்படியே இருக்கும். நாம் உபயோகிப்பதில் எந்த குறையும் இல்லை.

பல வகை உணவு உடலுக்கு கேடு !
பழ வகை உணவே நன்று !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solve : *
12 + 21 =